IND vs AFG: கடைசி டி20…இந்தியா – ஆஃப்கானிஸ்தான் மோதல்..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இரவு 7:00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மொஹாலி மற்றும் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று களம் இறங்கவுள்ளது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங்-11ல் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.
அதன்படி ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் பிளேயிங்-11ல் இடம் பெறலாம். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் பிளேயிங்-11 இல் சேர்க்கப்படலாம், முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கானும் சேர்க்கப்படலாம். இது தவிர ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025