நாளை கடைசி டி20 போட்டி !!தொடரை சமன் செய்யுமா இந்தியா ?
- ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
- நாளை இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ராகுல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நாளை இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழக்க நேரிடும்.