இன்று கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி ?

Published by
Venu

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கான்பெராவில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி ஒருநாள் போட்டி, கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது.மொத்தம் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது.முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது ஒருநாள் போட்டியிலும்  ,ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதனிடையே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கான்பெராவில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு :

2 ஆம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் போட்டியின் பாதியில் வெளியேறினார்.இதனால் வார்னர் களத்திலேயே சுருண்டு விழுந்து, நடக்க முடியாமல் துடித்தார். பின்னர் வார்னரை மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். இந்த காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகுவதாக அறிவித்தார்.அதன்பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் முதல் ஒருநாள் போட்டியில் 69 ரன்களும் , இரண்டாவது ஒருநாள் போட்டியில் 83 ரன்களும் அடித்தார்.இரண்டு ஒருநாள் போட்டிகளையும் எடுத்துக்கொண்டால் வார்னர் மற்றும் பின்ச் ஜோடி சிறப்பாக விளையாடி உள்ளது.ஆகவே வார்னர் இல்லாதது பின்னடைவு தான்.

இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசம் :

முதலி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  375 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.ஆனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.சமியை தவிர்த்து மீதமுள்ள பும்ரா,சாகல் ,சைனி,ஜடேஜா ஆகியோர் 10 ஒவர்கள் வீசி 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்கள்.இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 390 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.இந்த போட்டியிலும்  இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினார்கள். சமி,பும்ரா,சாகல் ,சைனி ஆகியோர் 10 ஒவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்தனர்.ஜடேஜா 60 ரன்களுக்கு மேல் கொடுத்தார்.இதனால் இன்று நடைபெறும் போட்டியில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த யார்கர் மன்னன் நடராஜன் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்துள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் :

இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடித்தாலும் இரண்டிலும் தோல்வியே அடைந்துள்ளது.அதற்கு முக்கிய காரணம் பேட்ஸ்மேன்கள் தங்களது நிலையான ஆட்டத்தை இறுதிவரை வெளிப்படுத்தி வெற்றிக்கு கொண்டு செல்லாததே ஆகும்.முதல் ஒரு நாள் போட்டியில் தவான் ,பாண்டியா சிறப்பாக விளையாடினாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை.அதைப்போலத்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் கேப்டன் கோலி , ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை.பேட்ஸ்மேன்களின் முக்கிய பங்கு அணி இறுதிவரை போராடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே ஆகும்.ஆனால் அந்தப்பணியை இந்திய பேட்ஸ்மேன்கள் முடிக்கத் தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.குறிப்பாக இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் காயம் காரணமாக களமிறங்கவில்லை என்பது பெரும் பின்னடைவு ஆகும்.

ஒருநாள் போட்டி அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா,  சாஹல், குல்தீப் யாதவ்,  பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்,சஞ்சு சாம்சன்,நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

17 minutes ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

1 hour ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

1 hour ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

2 hours ago

விழுப்புரத்தில் பரபரப்பு: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி – உறவினர்கள் சாலைமறியல்!

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…

3 hours ago

பரபரப்பு: ஆட்டு மந்தைகளுடன் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அடைப்பு.!

மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…

3 hours ago