இன்று லீக் சுற்றின் கடைசி போட்டி! அரை இறுதிக்கு தகுதி பெரும் அடுத்த 2 அணிகள் யார் யார்?
மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 20-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது.
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த தொடரின் லீக் சுற்றுக்கான கடைசி போட்டி என்பது நடைபெற இருக்கிறது. அதன்படி, இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மேலும், குரூப்-B பிரிவை பார்க்கும் போது இன்று நடைபெறும் இந்த போட்டியின் முடிவை வைத்தே, அரை இறுதி சுற்றுக்கு எந்த இரு அணிகள் தேர்வாகப்படும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதாவது, குரூப்-B பிரிவின் தற்போதைய புள்ளிப்பட்டியலை பார்க்கும் போது இங்கிலாந்து அணி ஒரு தோல்விகள் கூட பெறாமல் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 4 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு இடையில் தென்னாபிரிக்கா மகளிர் அணி 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி விடும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும்.
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை இந்த தொடர் ஒவ்வொரு அணிக்கும் கடும் சவாலாகவே இருந்து வருகிறது. அதிலும், இந்திய மகளிர் அணி இந்த தொடரை விட்டு வெளியேறி இருந்தாலும், இந்திய ரசிகர்களிடையே இந்த தொடர் மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இன்று நடைபெறும் போட்டிக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரிதளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.