நெருங்கும் உலகக்கோப்பை..! மிரட்டும் மலிங்காவுக்கு ஓய்வு ..!
அதிவேக பந்து வீச்சுக்கு பெயர் போனவர் லசித் மலிங்கா காற்றை கிழித்து கொண்டு இவர் வீசும் பந்து பறந்து அல்ல பாய்ந்து செல்லும் அப்படி ஒரு பந்து வீச்சாளர் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார்.
மலிங்கா என்றாலே அவர் வீசும் பந்து நாம் நினைவிற்கு வரும் முன் அவருடைய தங்க நிற சுருட்டை முடித்தான் நினைவிற்கு வரும் கிரிக்கெட் பார்க்க செல்லும் அனைவரும் அதே போன்ற விக்கை வாங்கி தலையில் அணிந்து கொண்டு கிரிக்கெட் பார்த்து ரசிப்பதை நாம் கண்டுள்ளோம்.இப்படி அதிரடிக்கு சொந்தக்காரர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.இதில் அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் அடுத்து உலகமே என் கிரிக்கெட் உலகே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்ற உலககோப்பை திருவிழா 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில் இலங்கை அணியும் கலந்து கொள்கிறது.அதில் மலிங்காவும் உள்ளார்.இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி மலிங்காவிற்கு தற்போது ஓய்வு தேவை இப்போ ஒய்வு எடுத்துட்டு நம்ம அணிக்காக தெம்போடு இறங்கனும் , நினச்சு என்னவோ மலிங்காவிற்கு ஓய்வு தருவதாக கூறியுள்ள நிலையில் இந்த ஓய்வுக்கு பிறகு உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டில கலந்து கொள்வர் அப்படின்னு கூறியுள்ளது. மேலும் 18 மற்றும் 21-ம் தேதி இலங்கை அணி ஸ்காட்லாந்து அணியுடன் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.