இந்திய அணியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுபவர்களை பார்க்கமுடியால -லான்ஸ் குளூசெனர்..!
தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 15-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்தது மழை காரணமாக போட்டி ரத்தானது.
நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுபவர்களை பார்க்க முடியவில்லை என தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூசெனர் தெரிவித்து உள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். வேகப்பந்து வீச்சில் சைனி அதிகம் தாக்கம் கொண்டவர். சைனி பந்து வீச்சு மிகத் துல்லியமாக இருக்கும். அவர் உடற்தகுதி சிறப்பாக உள்ளது எனக் கூறினார்.