யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..!
முன்னாள் இந்திய தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புத் அவரது 62-வது வயதில் ஐக்கிய அரபு நாட்டின் (யுஏஇ – UAE) கிரிக்கெட் அணிக்கு தலைமை பறிச்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுக்கு இவர் யுஏஇ-யின் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். தற்போது இவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின், கிரிக்கெட் மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.
#NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..!
இவர் இந்திய அணிக்காக 1985 – 1987 வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஓடிஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். மிக குறைவான போட்டிகளை மட்டுமே விளையாடியே ராஜ்புத் அதன் பிறகு ஓய்வு பெற்றார். அதன் பின் 2007 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். மேலும், 2022 -ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு, ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற வைத்தார்.
தற்போது எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய வெளியீட்டில், “யுஏஇ கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கபட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். சில வருடங்களாக யுஏஇ கிரிக்கெட் அணி திறமை மிக்க அணியாக செயல்பட்டு வருகிறது. யுஏஇ கிரிக்கெட் அணியில் தற்போது உள்ள வீரர்கள் எல்லாம் அதிக உத்வேகத்துடனும், திறமை மிக்கவராகவும் இருந்து வருகின்றனர்.
கடந்த சில டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யுஏஇ கிரிக்கெட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வருகின்ற காலத்தில் யுஏஇ கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் பயிற்சியாளராக பணியாற்ற போகும் இந்த மூன்று வருடங்களில் யுஏஇ கிரிக்கெட் அணியை ஒரு நல்ல திறமை மிக்க அணியாக மாற்றுவேன் அதுவே எனது இலக்காக நான் பார்க்கிறேன். அதற்காக நான் முழு முனைப்போடு செயல்படுவேன்”, என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய வெளியீட்டில் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறி உள்ளார்.