#KXIPvsKKR: வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லுமா பஞ்சாப்…?
இன்று ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டி இன்று ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. புள்ளி பட்டியலில் கடைசியாக இருக்கும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் நோக்குடன் பஞ்சாப் அணி வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 25 முறை மோதிய போட்டியில் 17 முறை கொல்கத்தா அணியும் 8 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்த ஷேக் சயீத் மைதானத்தில் பஞ்சாப் அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அதைப்போல் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முன்னுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.