ஐபிஎல் தொடரின் 43 ஆம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து, 126 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பந்துவீச்சில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், 35 ரன்கள் அதிதி வார்னர் வெளியேற, அவரைத் தொடர்ந்து 19 ரன்கள் மட்டுமே அடித்து பைர்ஸ்டோவ் வெளியேறினார்.
அடுத்த மனிஷ் பண்டே – அப்துல் சமத் கூட்டணி ஆடிவந்தனர். 7 ரன்கள் மட்டுமே அடித்து அப்துல் சமத் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து 15 ரன்கள் அடித்து மனிஷ் பண்டே பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் களமிறங்கிய விஜய சங்கர் 26 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக ஹைதராபாத் அணி, 19.5 ஒவரில் தனது அனைத்து விக்கெட்களை இழந்து 114 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சை பொறுத்தளவில் அர்ஷிதீப் சிங் தலா 3 விக்கெட்களும், கிறிஸ் ஜார்டான் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5 ஆம் இடத்தில் உள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…