அதிவேக சதம் அடித்த குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி…!

தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார்.
இலங்கையின்தொடக்க வீரர் குசல் பெரேரா ஹசன் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்ப பின்னர் பாத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் கை கோர்த்து சிறப்பாக விளையாடினார். நிஷாங்கா அரைசதம் எடுத்தார். மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் சதம் அடித்தார். மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கால் விளாசி மொத்தம் 122 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை மெண்டிஸ் பெற்றுள்ளார்.
இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
49 பந்துகள் – ஐடன் மார்க்ரம்
50 பந்துகள் – கெவின் ஓ பிரையன்
51 பந்து – கிளென் மேக்ஸ்வெல்
52 பந்துகள் – ஏபி டி வில்லியர்ஸ்
57 பந்துகள் – இயான் மோர்கன்
65 பந்துகள் – குசல் மெண்டிஸ்
இந்நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மெண்டிஸிக்கு பதிலாக அணியில் துஷான் ஹேமந்த களத்தில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025