தோனி எடுக்கும் முடிவு தப்பு குல்தீப் பகிரங்க குற்றச்சாட்டு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி சிறந்த ஆட்டக்காரர் அதனை தாண்டி விக்கெட் கிப்பர்,ஆட்டத்தை கணிக்கக் கூடிய ராஜதந்திரி மேலும் சிறந்த ஆலோசகர் என்ற கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை கொண்டவர்.
மேலும் இந்திய அணி பல நெருக்கடியை சந்தித்த போது தோனியின் ஆலோசணை மற்றும் செயல்பாடும் அதிக இடம்பெறும்.தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.மேலும் கோலியின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் கடும் நெடுக்கடியில் தொனியே சில ஆலோசனைகளை வழங்குவார்.மேலும் பந்து வீச்சாளர்களுக்கும் ஆலோசணை வழங்குவார்.அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு ஆலோசனையோடு சிறந்த செயல்பாட்டு பற்றியும் எடுத்துரைப்பார்.
இதற்கிடையே தான் களத்தில் தோனி எடுத்த முடிவுகள் எல்லாம் தப்பு என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட அவர் களத்தில் தோனியின் ஆலோசணை மற்றும் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அதில் களத்தில் தோனி அதிகம் பேசமாட்டார் ஏதாவதுதொடர்பாக ஏதாவது கூற விரும்பினால் மட்டுமே ஓவர்களுக்கு இடையே வந்து அவர் பேசுவார் களத்தில் சுழற்பந்து வீச்சில் தோனி எடுக்கும் பல முடிவுகள் தவறாக தான் இருந்துள்ளது
இது தெரிந்தபோதும் அதை அவரிடம் சுட்டிக்காட்ட முடியாத சுழ்நிலை தான் நிலவியது என்று குல்தீப் யாதவ் தெரிவித்து உள்ளார்.இந்திய அணியில் குல்தீப் மற்றும் தோனி இருவரும் இணைந்து ஆட உள்ள நிலையில் இவருடைய கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் எடுத்த எல்லாம் முடிவுகளும் சரியாக நடக்கும் என்று சொல்ல முடியாது என கிரிக்கெட் ரசிகர்கள் முனுமுனுக்கின்றனர் .