ஐசிசியை கலக்கிய இந்திய சுழல் சூறாவளி கிரிக்கெட் தரவரிசை அறிவிப்பு..!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மாறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் இவர் வீழ்த்தினார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையை தற்போது வெளியிட்டது.இதில் குல்தீப் யாதவ் முதல் முறையாக 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தொடர்ந்து இந்த இடத்தில் நீடிக்கிறார்.மேலும் இந்தியாவிற்கு எதிரான இந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்ற முக்கிய நபர்களில் ஒருவரான மிட்செல் சான்ட்னெர் இதில் நான்கு இடங்கள் தாவி 10 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.மேலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஆன இமாத் வாசிம் நான்காவது இடத்தை பிடித்து உள்ளார்.
இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.