வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றபிறகு ரிங்கு சிங்குவை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் கடைசி வரை டெல்லி அணி போராடிய நிலையில், கடைசி நேரத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியை பதிவு செய்தது. போட்டி முடிந்த பிறகு குல்தீப் யாதவ் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடந்தது என்ன?
குல்தீப் யாதவ் (DC அணியைச் சேர்ந்தவர்) மற்றும் ரிங்கு சிங் (KKR அணியைச் சேர்ந்தவர்) என்றாலும் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறலாம். இருவரும் சர்வதேச அளவில் போட்டிகள் என்றால் இந்தியாவுக்கு விளையாடுவது என்பது தெரியும். எனவே, குல்தீப் யாதவ் விளையாட்டாக ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இது பெரிய அளவுக்கு சர்ச்சையாக காரணமே முதலில், குல்தீப் ரிங்குவை கன்னத்தில் மென்மையாக அறைந்தது நகைச்சுவையாக இருந்திருக்கலாம்.
ஆனால், இரண்டாவது முறை அவர் மிகவும் வேகமாக அறைந்ததாகவும், இது ரிங்குவுக்கு புண்படுத்துவதாகவும் வீடியோ பரவி வருவதை பார்த்த பலரும் தெரிவித்து வருகிறார்கள். இரண்டாவது முறை குல்தீப் யாதவ் அறைந்தது ரிங்குவின் முகபாவனை இதனால் அவர் அதிருப்தி அடைந்ததை வெளிப்படுத்தியது எனவும் பேசி வருகிறார்கள்.
வீடியோ தீ போல வைரலாகி வரும் நிலையில் வீடியோவை பார்த்த பலரும் நட்பாக இருந்தாலும் சரி பொது இடத்தில் வைத்து இப்படியா செய்வீர்கள்? என குல்தீப் யாதவை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். இந்த சம்பவம் சர்ச்சையானவுடன் இதற்கு கொல்கத்தா அணி நிர்வாகம் விளக்கம் அளித்து பேசியுள்ளது. இது ஒரு நட்பு சம்பவம் என்று கூறி, இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை வலியுறுத்தி நண்பர்கள் அப்படித்தானே இருப்பார்கள் என்பது போல பதிவிட்டுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் குல்தீப் யாதவை ரசிகர்கள் கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.
Media (𝘴𝘢𝘯𝘴𝘢𝘯𝘪) vs (𝘥𝘰𝘴𝘵𝘰𝘯 𝘬𝘦 𝘣𝘦𝘦𝘤𝘩 𝘬𝘢) Reality!
𝘎𝘦𝘩𝘳𝘪 𝘥𝘰𝘴𝘵𝘪 feat. our talented UP boys 😂 pic.twitter.com/2fY749CSXf
— KolkataKnightRiders (@KKRiders) April 30, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025