குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் வழக்கம் போல், அணியை தேர்சு செய்வதில் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிளேயிங் லெவனுக்காக அணியில் இருந்து யாரை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதுதான்.
அதாவது, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து விவாதம் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் இடையே நிலவி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் வழக்கம் போல் அணியை தேர்சு செய்வதில் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி உட்பட ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. அதில், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இரண்டு சரியான ஆல்ரவுண்டர்களாக இருப்பதால், குல்தீப்பா இல்ல, சக்ரவர்த்தியா என ஒருவரை தேர்ந்தெடுப்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கிரிக் பிளாக்கரின் கூற்றுப்படி, வங்கதேசத்திற்கு எதிராக விளையாட ரோஹித் குல்தீப்பை விரும்புவதாகவும், அதே நேரத்தில் கம்பீர் சக்ரவர்த்தியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கருத்தில் கொண்டு குல்தீப் யாதவை தேர்ந்தெடுக்க ரோஹித் சர்மா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சரி இறுதியில் யார் யாரை தேர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.