“என் தந்தைக்கு சமர்ப்பணம்”- மைதானத்திலேயே கண் கலங்கிய க்ரூனால்.. கட்டித்தழுவிய ஹர்திக்!
அறிமுக போட்டியிலே அதிவேகமாக சதம் அடித்த க்ரூனால் பாண்டியா, இதனை மறைந்த தனது தந்தைக்கு சரமர்ப்பிப்பதாக கூறி தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அழுதார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவ்ர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்கள்.
இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது விளையாடி வருகிறது. மேலும், இந்த போட்டியின்மூலம் அறிமுக வீரராக க்ரூனால் பாண்டியா விளையாடினார். முதல் போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அறிமுக போட்டியிலே அதிவேகமாக சதம் அடித்த க்ரூனால் பாண்டியா, இதனை மறைந்த தனது தந்தைக்கு சரமர்ப்பிப்பதாக கூறி தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அழுதார். தற்பொழுது அதுகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
This is all heart ????????
A teary moment for ODI debutant @krunalpandya24 post his brilliant quick-fire half-century????????@hardikpandya7 #TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/w3x8pj18CD
— BCCI (@BCCI) March 23, 2021