அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!
ஓவர்ட்டனுக்கு பதிலாக கான்வேயை கொண்டு வரவேண்டும் என சென்னை அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது.
அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பழையபடி அணி எப்போது பார்முக்கு திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் சில தெளிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர், ஜெய்மி ஓவர்ட்டனுக்கு பதிலாக டெவான் கான்வேயை அணியில் சேர்க்கவும், ராகுல் திரிபாதிக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜை கொண்டு வரவும் கூறியுள்ளார்.
அஷ்வினை நீக்க வேண்டாம் என்றாலும், அவரை பவர்பிளேயில் பந்து வீசுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். எதற்காக அஸ்வின் பவர்பிளேயில் கொண்டுவரப்படகூடாது என்பதற்கான காரணத்தையும் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” அஸ்வின் பொறுத்தவரையில் அவர் 7 முதல் 18வது ஓவர் வரை வீச வைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், சென்னை பிட்ச் சுழற்பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் ஆனாலும், பவர் பிளேயில் வீரர்கள் வெளியே இருக்கட்டமாட்டார்கள் எனவே விக்கெட் விழுவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும்.
அதுவே பவர் பிளேக்கு அடுத்தது என்றால் நிச்சயாமாக பந்தை அடிக்க நினைத்து கேட்ச் ஆக வாய்ப்புகள் இருக்கிறது, எனவே, 7 -வது ஓவருக்கு மேல் அவரை பந்துவீச அழைக்க வேண்டும். ஜடேஜா மற்றும் நூர் அகமதுடன் சேர்ந்து இவர்கள் குறைந்தது 10 ஓவர்களை எளிதாக வீச முடியும் எனவே சுழற்பந்துவீச்சும் அணியில் சிறப்பாக பயன்கொடுக்கும்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” ஓவர்ட்டனுக்கு பதிலாக கான்வேயையும், திரிபாதிக்கு பதிலாக கம்போஜையும் அணியில் சேர்க்க வேண்டும். அவர் எப்படி விளையாடுகிறார் என்று இன்னும் பார்க்கவில்லை எனவே அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். அதைப்போல, ஷிவம் துபேயை தொடக்க ஆடும் லெவனில் சேர்த்து, ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்த வேண்டும் .முகேஷ் சவுத்ரி முன்பு சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த மாற்றங்கள் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பிரச்சினைகளை சரிசெய்து, அவர்களை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு வர உதவும்” எனவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. எனவே, இந்த சூழலில் தான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுரையை வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025