பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்
சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இல்லையென்றால் புவனேஷ்குமார் அந்த இடத்திற்கு வரவேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் 6 அணிகள் தங்கள் அணி வீரரக்ள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்தியா மற்றும் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு அணிகளும் இன்னும் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஐசிசியிடம் சமர்ப்பிக்கவில்லை.
இப்படியான சூழலில், இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் சமீபத்திய நாட்களாக பல்வேறு முன்னாள் வீரர்கள் , கிரிக்கெட் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பற்றி பேசியுள்ளார்.
அப்போது பும்ராவின் முக்கியத்துவம் பற்றி பேசினார். இந்திய அணிக்கு பும்ரா மிக முக்கியமான வீரர் என தெரிவித்தார். இருந்தும், அவரது உடற்தகுதி கேள்விக்குறியாக இருக்கிறது என்றும். அதனால் தான் இந்திய அணி இன்னும் அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடாமல் இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
அதே நேரம் பும்ராவுக்கு உடற்தகுதி சரியாகவில்லை அவர் இந்த தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்தியா அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், அவருக்கு பதில் புவனேஷ்குமார் நல்ல தேர்வாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். புவனேஷ்குமார் கடைசியாக 2022 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு 2 வருடங்களுக்கு மேலாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. என்று தெரிவித்தார்.
இருந்தாலும், புவனேஷ்குமார் மற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்து பந்துவீச முடியும். என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிராஜ் அளவுக்கு யாருக்கும் இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் தொடர்ந்து அணியில் நீடிக்க அதிர்ஷ்டம் தான் காரணம் எனவும், சுப்மன் கில் என்ன செய்தார் என்று அவருக்கு துணை கேப்டன் பொறுப்பெல்லாம் தருகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு அவர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் மற்ற வீரர்கள் மீதான தனது விமர்சனத்தையும் ஸ்ரீகாந்த் முன்வைத்து கருத்து தெரிவித்தார்.