டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 194 ரன்கள் குவித்துள்ளது.
இன்று நடைபெறும் 41-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிவருகின்றது .இப்போட்டி அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கில் , ராணா ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே கில் 9 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய திரிபாதி 13 ரன்கள் ,தினேஷ் 3 ரன்கள் எடுத்து இருவரும் வெளியேறினர்.பின்பு நரேன் மற்றும் ராணா ஜோடி சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய நரேன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ராணா சதம் விளாசி, 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.கடைசி பந்தில் மோர்கன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தது.டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா ,அன்ரிச் நோர்ட்ஜெ ,ஸ்டைனிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.பின்பு 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…