டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு..!
இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணி வீரர்கள்:
ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதீஷ் ராணா, மோர்கன் (கேப்டன் ), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரஸ்ஸல், கிறிஸ் கிரீன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றனர்.
மும்பை அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்டியா, நாதன் கூல்டர் நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.