மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாட முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக விளையாடியது. தொடர்ச்சியாக விக்கெட் விட்ட காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
கொல்கத்தா அணி போட்டியை அதிரடியாக விளையாடி விரைவாகவே முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் 3 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக சுனில் நரேன் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் களத்தில் நின்று சிக்ஸர் பவுண்டரி என விளாசி அதிரடியாக விளையாடினார்கள்.
சுனில் நரைன் அதிரடியாக ஆடி 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என விளாசி 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருப்பினும் ரிங்கு சிங் (15), ரஹானே (20) இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 10.1 ஓவர்கள் முடிவிலே 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி விவர பட்டியலிலும் கீழே சென்றது ஏற்கனவே, இந்த சீசனில் 5 போட்டிகள் விளையாடி இருந்த நிலையில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. மீதம் 4 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்து 5-வது தோல்வியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளது.