கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
திணறிய படியும், அதிரடியாக விளையாடியபடியும் கொல்கத்தா அணி விளையாடிய நிலையில், இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் போரெல் 1 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அட்டமிழந்தாலும் கூட ஃபாஃப் டு பிளெசிஸ் களத்தில் நின்று அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம். போரெலுக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த நேற்று கருண் நாயர் 15, ராகுல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் டு பிளெசிஸ் உடன் இணைந்து அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம். அதிரடி காட்டிக்கொண்டு இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் அரை சதம் விளாச மற்றொரு முனையில் இருந்த அக்சர் படேல் அரை சதம் அடிக்கும் நோக்கத்தில் விளையாடி கொண்டு இருந்தார். அவரும் 4 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்கள் என 43 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ்ஸும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 15 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் இருந்த காரணத்தால் வெற்றி நம்பிக்கை டெல்லி பக்கம் இருந்தது. ஆனால், அந்த சமயம் ஃபாஃப் டு பிளெசிஸ் சிக்ஸர் அடிக்க முயன்று 62 ரன்களுக்கு வெளியேறினார். கடைசி நம்பிக்கையாக விப்ராஜ் நிகம், அசுதோஷ் சர்மா இருவர் மட்டுமே களத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.
அந்த நம்பிக்கையையும் உடைக்கும் வகையில், அசுதோஷ் சர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் வெற்றி நம்பிக்கை முற்றிலும் டெல்லி அணிக்கு போய்விட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் கடைசி வரை விப்ராஜ் (38) முடிந்த அளவுக்கு போராடி கொண்டு இருந்தார்.
இருப்பினும் டெல்லி அணியால் வெற்றிபெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து. எனவே, கொல்கத்தா 14 அணி வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.