37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் டி20 தொடரின் 12-வது போட்டியில் கொல்கத்தா அணியும் மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் , சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுனில் நரைன் 15 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய நிதிஷ் ராணா 22 , ரஸ்ஸல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்தியில் களம் கண்ட மோர்கன் 34 ரன்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்தனர். 175 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  பட்லர்,  ஸ்மித் இருவரும் இறங்கினர்.

வந்த வேகத்தில் ஸ்மித் 3 ரன்னில் விக்கெட் இழந்தார்.பிறகு இறங்கிய சஞ்சு சாம்சன் 8 ரன் எடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த  பட்லர் 21 ரன்னில் வெளியேற பிறகு இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்தியில் இறங்கிய டாம் கரண் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Published by
murugan
Tags: IPL2020

Recent Posts

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…

3 mins ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

7 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

21 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago