37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி..!
ஐபிஎல் டி20 தொடரின் 12-வது போட்டியில் கொல்கத்தா அணியும் மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் , சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுனில் நரைன் 15 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய நிதிஷ் ராணா 22 , ரஸ்ஸல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்தியில் களம் கண்ட மோர்கன் 34 ரன்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்தனர். 175 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், ஸ்மித் இருவரும் இறங்கினர்.
வந்த வேகத்தில் ஸ்மித் 3 ரன்னில் விக்கெட் இழந்தார்.பிறகு இறங்கிய சஞ்சு சாம்சன் 8 ரன் எடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த பட்லர் 21 ரன்னில் வெளியேற பிறகு இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து மத்தியில் இறங்கிய டாம் கரண் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.