#IPL2020: சூப்பர் ஓவர் மூலம் கொல்கத்தா அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரில் 35-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய திரிபாதி 23 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, நிதீஷ் ராணா இறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 36 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.
பின்னர் களம் கண்ட ரஸ்ஸல் வந்த வேகத்தில் 9 ரன் எடுத்து வெளியேற மத்தியில் இறங்கிய மோர்கன் 34 எடுத்தார். தினேஷ் கார்த்திக் 29* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர்.
164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இறங்கினர். பொறுமையாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பிரியாம் கார்க் வந்த உடனே 4 ரன் எடுத்து வெளியேற அடுத்த சில நிமிடங்களில் ஜானி பேர்ஸ்டோவ்வும் 36 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் சென்றார்.
மத்தியில் இறங்கிய டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை , இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர்.
இதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 3 பந்தில் 2 விக்கெட்டை இழந்து 2 ரன் எடுத்தனர். பின்னர், இறங்கிய கொல்கத்தா 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.