டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?
சென்னையும், கொல்கத்தாவுக்கு இதுவரை 30 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் 19 முறை சென்னையும், 10 முறை கொல்கத்தாவும் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி(w/c), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது
கொல்கத்தா
குயின்டன் டி காக் (w), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(c), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அதில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக விளையாடி வந்த ருதுராஜ் காயம் காரணமாக தற்காலிமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். எனவே, அவருக்கு பதிலாக தோனி தான் மீதமிருக்கும் போட்டிகளை கேப்டனாக வழிநடத்தி செல்ல இருக்கிறார்.
மீண்டும் அனுபவம் வாய்ந்த தோனி கேப்டனாக களமிறங்கியுள்ள காரணத்தால் இந்த போட்டியில் வெற்றிபெற்று அணி பழையபடி பார்முக்கு திரும்பும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், ருதுராஜ் இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.