பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இருப்பினும், இந்த முடிவு தவறாக மாறிவிட்டது, பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரப்சிம்ரன் சிங் 15 பந்துகளில் 30 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். ஷஷாங்க் சிங் 17 பந்துகளில் 18 ரன்களும், சேவியன் பார்ட்லெட் 11 ரன்களும், நேஹால் வதேரா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன் கூட எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
மேலும், ஜோஷ் இங்கிலீஷ் 2, க்ளென் மேக்ஸ்வெல் 7, சூர்யான்ஷ் ஷேட்ஜ் 4, மார்கோ ஜான்சன் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்பொது, கொல்கத்தா அணி 112 என்ற எளிய இலக்குடன் களம் இறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025