ஐபிஎல் தொடரின் 39 ஆம் போட்டியான இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 9 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 5 போட்டிகளிலும், பெங்களூர் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெறும் காரணத்தினால், இரு அணிகளிலும் ஸ்பின் பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் அணியில் தொடக்கம் முதல் அதிரடியான பேட்டிங் இருப்பது, அணிக்கு கூடுதல் பலம். கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் பெர்குசனின் அதிரடி பந்துவீச்சால் ( ஒரே போட்டியில் 5 விக்கெட் [2 சூப்பர் ஓவர்] அபாரமாக வெற்றிபெற்றது. இது, அந்த அணிக்கு கூடுதல் பலம். மேலும், இவ்விரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 14 முறையும் மோதியுள்ளது.
தற்பொழுது பஞ்சாப் அணி அதிரடியாக ஆடிவரும் நிலையில், இன்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெங்களூர் அணியும் வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்திற்கு வரும். ஆகையால் இன்றைய போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…