டெல்லிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக சுப்மன் கில், நிதீஷ் ராணா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே நிதீஷ் ராணா 15 ரன்னில் ஸ்டம்ப் அவுட்டானார். இதைத்தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் 19 ரன்கள் எடுத்து லலித் யாதவிடம் கேட்சை கொடுத்தார்.
பின்னர் இறங்கிய மோர்கன், சுனில் நரேன் இருவரும் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் நிதானமாக விளையாடி வந்த பசுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் ஸ்மித்திடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மத்தியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 4 சிக்சர், 2 பவுண்டரி என மொத்தம் 45* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். 155 ரன்கள் இலக்குடன் டெல்லி களமிறங்கவுள்ளது.