#IPL2020: 150 ரன்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா..!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 46 ஆம் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
நிதீஷ் ராணா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே ராணா ரன் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், இறங்கிய ராகுல் திரிபாதி 7 ,
தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய மோர்கன், சுப்மான் கில் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த மோர்கன் அரைசதம் அடிக்காமல், 40 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், களம் கண்ட சுனில் நரேன் 6 , கமலேஷ் நாகர்கோட்டி 6, கம்மின்ஸ் 1 ரன்னில் வெளியேற நிதானமாகவும், சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 57 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய களம் கண்ட லாக்கி பெர்குசன் 24 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து 149 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி 150 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.