நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு தேர்வு செய்துள்ளது.

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் பலமான அணிகளாகவே இருக்கின்றன. இதுவரை நடந்த 6 போட்டிகளில் யில் கொல்கத்தா அணி, 3 போட்டியில் வென்றுள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணி 5 போட்டிகளில், 3 போட்டியில் வென்றுள்ளது.
போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு தேர்வு செய்துள்ளது, இதனால் கொல்கத்தா அணி பந்தை வீச தயாராகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணியில் குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் :
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹால் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இப்பொது, போட்டி நடைபெறும் பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்று பெரிய ரன் மழையை எதிர்பார்க்கலாம். இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 33 போட்டிகள் நடந்துள்ளன.
இதில், கொல்கத்தா 21 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது தெரிகிறது. இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025