இன்றயை ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் கொல்கத்தா அணி 12 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்பார்க்கப்படடும் வீரர்கள்:
கொல்கத்தா: நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயோன் மோா்கன் (கேப்டன்), சுநீல் நரேன், தினேஷ் காா்த்திக், ஆன்ட்ரே ரஸல், பட் கம்மின்ஸ், கமேலஷ் நகா்கோட்டி, வருண் சக்ரவா்த்தி, பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான்: (உத்தேச லெவன்): மனன் வோரா, ஜோஸ் பட்லா், சஞ்ஜு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, டேவிட் மில்லா், ஷிவம் துபே, ராகுல் தெவேதியா, கிறிஸ் மோரீஸ், சேத்தன் சக்காரியா, ஜெயதேவ் உனட்கட், முஸ்தாபிஜுா் ரஹ்மான்.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…