#image_title
ஐபிஎல்2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கி விளையாடி வந்தனர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து விராட் கோலி தனது அதிரடி காட்ட தொடங்கினர். அவருடன் களமிறங்கி விளையாடிய எந்த ஒரு வீரரும் சரியான கூட்டணி விளையாட்டை தராததால் விராட் கோலி மட்டுமே விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது கொல்கத்தா அணி.
தொடக்கத்தில் களமிறங்கிய சுனில் நரேன் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நொறுக்கி தள்ளினார். அவரது ருத்ர தாண்டவத்தால் அந்த அணி 6 ஓவர் முடிவிலேயே 80 ரன்களை கடந்தது. கொல்கத்தா அணிக்கு நல்ல ஒரு தொடக்கத்தை தொடங்கி வைத்த சுனில் நரேன் 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு பவர் பிளேவின் முடிவிலேயே முடிவுக்கு வந்தது.
அவரை தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் பெங்களூரு அணி பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் அட்டகாசமாக விளையாடி 30 பந்துகளை50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 15.2 ஓவர்களில் 168- 3 என்று வலுவான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. அதன் பிறகு ரிங்கு சிங் களம்கொண்டார். அப்போது கொல்கத்தா அணிக்கு 28 பந்துக்கு வெறும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இறுதியில், கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து, இந்த தொடரில் 2-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்றது. இதனால், பெங்களூரு அணியில் அதிரடி காட்டிய விராட் கோலியின் அரை சதமும் வீணானது. இதன் மூலம் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…
சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…
டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல்…
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர்…
ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்…