சரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள்.! சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.!
கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்றைய 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 6 ஓவரில் 56 ரன்களை சேர்ந்தனர். இவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களம்கண்ட இஷான் கிஷன் 14 ரன் எடுத்து வெளியேற இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா, லோக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் சுப்மான் கில் 13 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி இருவரும் கூட்டணி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மும்பை அணி இருவரின் விக்கெட்டை பறிக்க திணறியது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி அரைசதம் விளாசினர். இருவரின் கூட்டணியில் 88 ரன்கள் எடுத்தனர். அரைசதம் அடித்த சில நிமிடங்களில் வெங்கடேஷ் ஐயர் 53 ரன் எடுத்து பும்ரா ஓவரில் போல்ட் ஆனார்.
இறுதியாக கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை காலத்தில் ராகுல் திரிபாதி 74* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இதனால், புள்ளி பட்டியலில் கொல்கத்தா 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு வந்தது. 4 இடத்தில் இருந்த மும்பை அணி பின்னுக்கு தள்ளப்பட்டு 5-வது இடத்திற்கு சென்றது.