கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

playoffs ipl

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து கணித்து பேசியுள்ளார். அவருடைய கணிப்பில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) போன்ற வலுவான அணிகள் இல்லாதது  இரண்டு அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், ஐபிஎல் 2025 பிளேஆஃபுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளை பதான் பட்டியலிட்டு, அதற்கான காரணங்களையும் விளக்கி பேசியிருக்கிறார். இர்ஃபான் பதானின் கணிப்பின்படி ஐபிஎல் 2025 பிளேஆஃபுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் எவை என்பதை விரிவாக பார்ப்போம்.

இர்ஃபான் பதானின் டாப்-4 அணிகள்:

1.சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

இர்ஃபான் பதான் முதலில் சென்னை அணியை தேர்வு செய்துள்ளார். அதற்கான காரணம் CSK அணியின் பலம் அவர்களது வலுவான பேட்டிங் வரிசை மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு என்று தேர்வு செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி சிறப்பாக செயல்படுகிறது. மேலும், சென்னையின் சொந்த மைதானமான சேபாக்  பிட்ச், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா போன்ற வீரர்கள் எதிரணிகளை திணறடிப்பார்கள். அணியின் அனுபவமும் இறுதி சுற்றுகளில் பெரிய பலமாக இருக்கும். அது மட்டுமின்றி CSK எப்போதும் பிளேஆஃபுக்கு செல்லும் அணி எனவே சென்னையை நான் தேர்வு செய்கிறேன்” என பேசியிருக்கிறார்.

2.ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

சஞ்சு சாம்சன் தலைமையிலான RR அணி, இளம் வீரர்களையும் அனுபவ வீரர்களையும் சரியாக கலந்து ஒரு சமநிலையான அணியாக திகழ்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்ற பேட்ஸ்மேன்களும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் போன்ற பந்துவீச்சாளர்களும் அணியை வலுப்படுத்துகின்றனர். இதன் காரணமா , “RR-ன் ஆட்ட முறை மற்றும் திட்டமிடல் பிளேஆஃபுக்கு ஏற்றது.” எனவும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

பெங்களூர் அணியின் பேட்டிங் பலம் எப்போதும் அவர்களுக்கு பெரிய பிளஸ். ரஜத் படிதார் தலைமையில், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரும் அணியில் இளம் திறமைகள் மற்றும் அனுபவமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே என்னுடைய கருத்துப்படி, “RCB இந்த முறை தங்கள் பந்துவீச்சை சரியாக பயன்படுத்தினால், பிளேஆஃபுக்கு செல்வது உறுதி.” எனவும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

4.மும்பை இந்தியன்ஸ் (MI)

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி, அனுபவமும் இளமையும் கலந்த ஒரு சக்திவாய்ந்த அணி. ரோஹித் சர்மா, இசூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் பலமும், ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சும் அணியை முன்னெடுக்கும். “MI எப்போதும் பெரிய போட்டிகளில் சிறப்பாக ஆடும் அணி, அவர்கள் பிளேஆஃபை தவறவிட மாட்டார்கள் எப்படி வேண்டுமானாலும் வந்துவிடுவார்கள்” எனவும் பதான் கூறுகிறார்.

KKR மற்றும் SRH ஏன் இல்லை?

கொல்கத்தா அணி கடந்த ஆண்டு வெற்றிபெற்று சாம்பியன் அணியாக இருந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமை இல்லாதது மற்றும் சில முக்கிய வீரர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது என்று பதான் கருதுகிறார். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றாலும், பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால் பிளேஆஃபுக்கு செல்வது சவாலாக இருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்