9 விக்கெட் இழந்த கொல்கத்தா.., 134 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்கு..!
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 11 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர், ராகுல் திரிபாதி இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 22 ரன் எடுத்து வெளியேறினார்.அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6, மோர்கன் டக் அவுட் ஆனார்.
இதனால், கொல்கத்தா அணி 61 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திரிபாதி 36 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை மத்தியில் களம் கண்ட தினேஷ் கார்த்திக் மட்டும் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். 134 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.