#IPL2020 : த்ரில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி ! ராகுல் போராட்டம் வீண்

Published by
Venu

 கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியுடனான  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற 24-வது ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது.இந்த போட்டி அபுதாபியில் உள்ள சையத் மைதானத்தில் (Zayed Stadium) நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 58 ரன்கள் ,கில் 57 ரன்கள்,மோர்கன் 24 எடுத்தனர்.களத்தில் கம்மின்ஸ் 5* ரன்களுடன் இருந்தார்.  பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி ,ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் , மயங்க்  இருவரும் களமிறங்கினார்கள்.ராகுல் மற்றும் மயங்க் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆனால் பஞ்சாப் அணி 115 ரன்கள் இருந்த போது மயங்க் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஆனால், பூரன் 6 ரன்கள் ,சிம்ரன் சிங் 4 ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.ஒரு பக்கம் சிறப்பாக விளையாடிய ராகுல் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.மந்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணன் 3 விக்கெட்டுகள் ,சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதனால்,கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று  மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 1 வெற்றி,6 தோல்வி அடைந்துள்ளது.இதனால் 2 புள்ளிகளுடன் அணி 8-வது இடத்தில் உள்ளது.

Published by
Venu

Recent Posts

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

30 mins ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

55 mins ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

1 hour ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

2 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

3 hours ago