#IPL2020 : த்ரில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி ! ராகுல் போராட்டம் வீண்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 24-வது ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது.இந்த போட்டி அபுதாபியில் உள்ள சையத் மைதானத்தில் (Zayed Stadium) நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 58 ரன்கள் ,கில் 57 ரன்கள்,மோர்கன் 24 எடுத்தனர்.களத்தில் கம்மின்ஸ் 5* ரன்களுடன் இருந்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி ,ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் , மயங்க் இருவரும் களமிறங்கினார்கள்.ராகுல் மற்றும் மயங்க் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆனால் பஞ்சாப் அணி 115 ரன்கள் இருந்த போது மயங்க் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஆனால், பூரன் 6 ரன்கள் ,சிம்ரன் சிங் 4 ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.ஒரு பக்கம் சிறப்பாக விளையாடிய ராகுல் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.மந்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணன் 3 விக்கெட்டுகள் ,சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதனால்,கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 1 வெற்றி,6 தோல்வி அடைந்துள்ளது.இதனால் 2 புள்ளிகளுடன் அணி 8-வது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)