ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள்நடைபெறுகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணியும், ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது. முதல் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் லக்னோ அணி களமிறங்க உள்ளது.
கொல்கத்தா அணி வீரர்கள்:
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ அணி வீரர்கள்:
குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ அணியில் 2 வீரர்கள் நீக்கப்பட்டு புதியதாக 2 பேர் அணியில் சேர்க்கப்ட்டுள்ளனர். அதன்படி படிக்கல் மற்றும் நவீன்-உல்-ஹக் நீக்கப்பட்டு ஷமர் ஜோசப் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் திரும்பியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…