ஐபிஎல் (IPL 2021) இன் 41 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கைகளிலிருந்து வெற்றி வாய்ப்பு முற்றிலும் நழுவியது.இனிமேல்,நைட் ரைடர்ஸுக்கு போட்டி மேலும் கடினமாக இருக்கும், ஏனெனில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதற்கிடையில்,ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் காயமடைந்தார். இதனால்,ஐபிஎல் 2021-லிருந்து குல்தீப் யாதவ் விலகினார்.
இந்நிலையில்,ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
மறுபுறம் டெல்லி அணி தங்கள் பிளேஆஃப் இடத்தை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளன.மேலும்,டெல்லி அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இதுவரை,ஐபிஎல்லில் இரு அணி தரப்பினரும் 27 முறை மோதியுள்ளனர். அதில்,டெல்லி அணி 12 முறையும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது.யுஏஇயில் இரு அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டங்களில், டிசி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கணிக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (c), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக் (wk), சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
கணிக்கப்பட்ட டெல்லி அணி:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (c), ஹெட்மியர், லலித் யாதவ்/ஸ்டீவ் ஸ்மித், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…