கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்.!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா மெதுவாக ஓவர் ரேட்டைப் பராமரித்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓவர்-ரேட் ( slow over-rate) குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ், இந்த சீசனில் அவரது அணியின் இரண்டாவது குற்றமாக இருந்ததால், ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவேண்டும். அப்படி வீசவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். எனவே, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி மெதுவான ஓவர் வீதத்தை கடைபிடித்ததால், அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்ஜாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இதைப்போலவே மெதுவான ஓவர் வீதத்தை கடைபிடித்ததால் நிதிஸ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025