டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதி வருகிறது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தனர்
அதன்படி, டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடினர். 5-வது ஓவரில் தவான், லோக்கி பெர்குசன் வீசிய பந்தை வெங்கடேஷ் ஐயரிடம் கேட்சை கொடுத்து 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்க சிறப்பாக விளையாடி வந்த ஸ்மித் லோக்கி பெர்குசன் ஓவரில் 39 ரன்னில் போல்ட் ஆனார். இதையெடுத்து, களம் கண்ட ஹெட்மியர் 4 ரன், லலித் யாதவ், ஆக்சர் படேல் டக் அவுட் ஆனார்கள். இதனால், டெல்லி அணி 92 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தனர். பின்னர் களத்தில் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் லோக்கி பெர்குசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 128 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…