IPL2024: மரண அடி… 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா ..!

Published by
murugan

IPL2024:  கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.

ஏனென்றால் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சீரான இடைவேளையில் பறிகொடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ராம் 20 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

114 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். 2-வது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாச அடுத்த பந்தில் ஷாபாஸ் அகமது இடம்  கேச்சை கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட தொடங்கினார். பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ் , வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடிக்காமல்39 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் வெங்கடேஷ் ஐயர் 52* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

7 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

8 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

9 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

9 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

10 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

10 hours ago