KKRvsSRH : பேட்டிங் செய்ய களமிறங்கும் கொல்கத்தா ..! தடுத்து நிறுத்துமா ஹைதராபாத் ?
![KKRvsSRH Toss [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/KKRvsSRH-Toss-file-image.webp)
KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்று தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. ஐதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதும் இந்த ஐபில் தொடரின் 3-வது போட்டி தற்போது கொல்கத்தா, ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் தற்போது தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸின் தலைமையில் களமிறங்கும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி, பல சர்ச்சையில் இருந்து வரும் ஷ்ரேயஸ் ஐயர் தலைமை கொல்கத்தா அணியை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியான இந்த போட்டிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இரு அணிகளும் விளையாட போகும் இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவான ‘பிட்ச்’ என்பதால் ஹைதராபாத் அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
கொல்கத்தா அணி வீரர்கள் :
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ஹைதராபாத் அணி வீரர்கள் :
மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.