இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

Shreyas Iyer

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.

இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, இங்கு காதுகள் செவிடாகும் அளவிற்கு சத்தமாக உள்ளது. இருந்தாலும், நான் எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். முதல் ஓவர் பவர்பிளேயில் சிறப்பான தொடக்கம் இருந்தது.

ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். பவர்பிளேக்குப் பிறகு எங்களால் பிட்சியின் நிலைமைகளை புரிந்துகொள்ள முடியவில்லை, இதனால் ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல. சென்னை அணி வீரர்களுக்கு பிட்சியின் நிலைமை நன்றாக தெரியும். அவர்கள் எங்கள் திட்டங்களை சிறப்பாக பந்துவீசி முறியடித்தனர்.

இதன் காரணமாக பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. முதல் பந்தில் இருந்து அடிப்பது என்பது எளிதாக இருக்கவில்லை. நாங்கள் இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சி செய்தும். ஆனால் எங்கள் திட்டத்தின் படி நடக்கவில்லை. பவர்பிளேக்குப் பிறகு விக்கெட் மாறியது. நாங்கள் 160 முதல் 170 என்பது இந்த பிட்சிக்கு ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம், ஆனால் பவர் பிளேவுக்கு பிறகு ரன்களின் வேகம் குறைந்தது.

இந்த போட்டியின் மூலம் நாங்கள் மீண்டும் பல்வேறு திட்டங்களை தீட்டவேண்டும், அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தோல்வி என்பது தொடரின் தொடக்கத்தில் வந்தது மகிழ்ச்சி தான். இது ஒரு அனுபவம் தான். நாங்கள் திரும்பிச் செல்லும்போது, ​​எங்கள் ஹாம் கண்டிஷன் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, நாங்கள் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, அதை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்