கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!!

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் கொல்கத்தா அணி பந்து வீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் ஐபிஎல் நிர்வாகம் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு முன்பு தோனி, மற்றும் ரோஹித் சர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025