IPL2024: மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தனர். இருப்பினும் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும், மத்தியில் களமிறங்கிய நிதிஷ் ராணா 33 ரன்களும், ரசல் 24 ரன்களும் எடுத்தனர்.மும்பை அணியில் பும்ரா, பியூஷ் சாவ்லா தலா 2 விக்கெட்டையும், கம்போஜ், நுவான் துஷாரா ஒரு தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
158 ரன்கள் இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் அரைசதம் அடிக்காமல் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் கூட்டணியில் மொத்தமாக 65 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது சுனில் நரைனிடம் கேட்சைக் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்க மூன்றாவது விக்கெட்டுக்கு களம் கண்ட சூர்யகுமார் யாதவ் நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 11 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடிக்க முயன்றபோது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் மூன்று பந்திற்கு வெறும் இரண்டு ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் அடுத்து களம் கண்ட நேஹால் வதேரா 3 ரன்களும், நமன் திர் ஐந்து பந்தில் 17 ரன்களும், மத்தியில் களமிறங்கிய திலக் வர்மா 32 ரன் எடுக்க இறுதியாக மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 2 விக்கெட்டையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும் பறித்தனர். கொல்கத்தா அணி இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
கொல்கத்தா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 13 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…