கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தனர்.
இவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பெங்களூரு அணி இறுதியில் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதனால் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக விளையாடிய வந்த சுப்மான் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 82 ரன் இருக்கும்போது சுப்மான் கில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது முகமது சிராஜிடம் கேட்சை கொடுத்து 48 ரன்னில் வெளியேறினார். இறுதியாக கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசிவரை வெங்கடேஷ் ஐயர் 41* ரன் எடுத்து களத்தில் நின்றார். தற்போது கொல்கத்தா அணி 7 இடத்தில் இருந்து 6 புள்ளிகள் பெற்று 5 வது இடத்த்திற்கு வந்துள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…