திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 204 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, சுனில் நரைன் 27 ரன் எடுத்தனர். இவர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த காரணத்தால் அணி பவர்பிளேயில் 85 ரன்களை தாண்டியது. அடுத்ததாக களத்திற்கு வந்த கேப்டன் அஜிங்க்யா ரஹானே 4 பவுண்டரி 1 சிக்ஸர் என 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் விக்கெட் எடுப்போம் என்பது போல டெல்லி அணி பந்துவீச்சில் கலக்கியது என்றும் சொல்லலாம். ரஹானேவுக்கு அடுத்ததாக களமிறங்கிய அங்க்கிரிஷ் ரகுவன்ஷி நானும் அதிரடி காட்டுகிறேன் என்பது போல விளையாடி கொண்டு இருந்தார். அந்த சமயம் மற்றோரு முனையில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் இந்த சீசன் வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 ரன்களுக்கு வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக ரிங்கு சிங், அங்க்கிரிஷ் ரகுவன்ஷி இருவரும் களத்தில் நின்று நிதானமாக சிறுது நேரம் விளையாடி கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் 14-வது ஓவரை டார்கெட் செய்த ரிங்கு சிங் தனது கியரை அதிரடிக்கு மாற்றி 2பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார். அந்த சமயம் அரை சதம் அடிக்கும் நோக்கத்தில் சென்று கொண்டு இருந்த அங்க்கிரிஷ் ரகுவன்ஷி44 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் ஆட்டமிழந்த கொஞ்ச நேரத்தில் நிதானமாக விளையாடி வந்த ரிங்கு சிங் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் களத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல், ரோவ்மேன் பவல் இரண்டு பிக் ஹீட்டர்கள் இருந்த காரணத்தால் நல்ல டார்கெட் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே, ரஸ்ஸல் (17) மட்டும் அதிரடியாக விளையாடினார். பவல் அதிரடி காட்டமுடியாமல் 5 ரன்களுக்கு வெளியேறினார். திணறிய படியும், அதிரடியாக விளையாடியபடியும் கொல்கத்தா அணி விளையாடிய நிலையில், இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா 204 அணி ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. மேலும், டெல்லி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக விப்ராஜ் நிகம், அக்சர் படேல், ஸ்டார்க், ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.