இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த 4-க்கு இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி “Yes boy” என கத்திய வீடியோ, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.
அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, தற்பொழுது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 2 ஆம் ஓவர் முதல் பந்தில் 4 அடித்தார். அவர் அடித்த நான்கு ரன்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கோலி, “Yes boy” என கத்தினார். தற்பொழுது இந்த காட்சிகள், சமூகவலைத்தளத்தில் பரவிவருகின்றனர். மேலும், அவர்களிடையே நட்புறவு நீடிப்பது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த சில நாட்களாக கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான நட்புறவு குறித்து பலவிதமான தகவல்கள் வருகின்றனர். குறிப்பாக, 2017 சாம்பியன்ஸ் டிராபியின் போதும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போதும், ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்காமல் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போதும் இதுபோன்ற செய்திகள் பரவத்தொடங்கியது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …