மிஸ்டர் கோலி, இது பயிற்சியா? இல்ல டான்ஸ்-ஆ? குழம்பிய ரசிகர்கள்.. சர்ச்சையான ஆர்ச்சரின் கமெண்ட்!

Default Image

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, போட்டிக்கு முன்னதாக பயிற்சியினை மேற்கொள்ளும்போது குத்தாட்டம் ஆடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 31-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. இது, பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு இந்த போட்டி 200 ஆம் போட்டியாகும்.

இந்தநிலையில், போட்டியில் தொடக்கத்தில் கோலி பயிற்சிபெறும் வீடியோ, ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட கோலி, குத்தாட்டம் போட, அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அவர் ஆடிய ஆட்டத்திற்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர், குத்து பாடல்களை சேர்த்து அந்த விடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு பலவிதமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விடியோவை பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் வேடிக்கையாக கமெண்ட் ஒன்றை செய்துள்ளார்.

அதனை பார்த்த கோலி ரசிகர்கள் பலர், விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், அந்த கமெண்ட் இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். அண்மையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை பற்றி கிரிக்கெட் வர்ணனையில் பேசியது சர்ச்சையானது, குறிப்பிடத்தக்கது.

But i guess this was orignal..????????https://t.co/oTN0lgJIE5

— Sarcasmic Engineer(RCB)???????? (@im_nishnt_shrma) October 16, 2020

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்